Home இந்தியா சஹாரா குழும நிறுவன இயக்குநர்கள் மீதான வழக்கு – இன்று தீர்ப்பு

சஹாரா குழும நிறுவன இயக்குநர்கள் மீதான வழக்கு – இன்று தீர்ப்பு

542
0
SHARE
Ad

subraடெல்லி, மே 6 – சஹாரா குழும நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட ரூ.20,000 கோடியை, அதன் முதலீட்டாளர்களிடம் திருப்பி வழங்காதது தொடர்பாக சுப்ரதா ராய் மற்றும் சஹாரா குழும நிறுவன இயக்குநர்கள் 2 பேர் கடந்த மார்ச் மாதம் 4-ஆம் தேதி கைதுசெய்யப்பட்டனர்.

இதனிடையே, தனது கைது உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் சுப்ரதா ராய் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு மீதான தீர்ப்பை கடந்த 21-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

முதலீட்டாளர்களிடம் பெற்ற ரூ.20 ஆயிரம் கோடியை திருப்பி தராததால் வழக்குத் தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுப்ரதா ராயை ஜாமீனில் வெளிவிட, ரூ.10 ஆயிரம் கோடியை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இன்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice