Home இந்தியா ராகுல் காந்தி வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி விலகுகிறார்! பிரியங்கா போட்டி!

ராகுல் காந்தி வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி விலகுகிறார்! பிரியங்கா போட்டி!

393
0
SHARE
Ad

புதுடில்லி : நடந்து முடிந்த இந்தியப் பொதுத் தேர்தலில் கேரளாவின் வயநாடு, உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி என 2 தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி அந்த 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.

வயநாடு தொகுதியை அவர் விட்டுக் கொடுக்கிறார். தொடர்ந்து ரேபரேலி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தொடர்வார்.

நீண்ட காலமாக நேரு – இந்திரா காந்தி குடும்பத்தினர் தற்காத்து வந்திருக்கும் தொகுதி உத்தரப் பிரதேசத்திலுள்ள ரேபரேலி நாடாளுமன்றத் தொகுதி. கடந்த சில தவணைகளாக சோனியா காந்தி இந்தத் தொகுதியைத் தற்காத்து வந்திருக்கிறார். கடந்த 2019 பொதுத் தேர்தலிலும் சோனியாவே இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

பிரியங்கா காந்தி
#TamilSchoolmychoice

சோனியா காந்தி, மாநிலங்களவை உறுப்பினராக அண்மையில் பதவியேற்றுக் கொண்டார்.

வயநாடு தொகுதியில் ராகுல் காந்திக்குப் பதிலாக பிரியங்கா காந்தி போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிரியங்காவுக்கு இதுதான் முதல் நாடாளுமன்றத் தேர்தலாகும்.