Home இந்தியா திரிபுரா சட்டசபை தேர்தல்: 93% வாக்குகள் பதிவாகி சாதனை

திரிபுரா சட்டசபை தேர்தல்: 93% வாக்குகள் பதிவாகி சாதனை

489
0
SHARE
Ad
tripuraஅகர்தலா, பிப்.15- திரிபுரா மாநில சட்டசபை தேர்தலில் சாதனையாக 93% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.
திரிபுராவில் மொத்தம் 60 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.
249 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.திரிபுராவில் 20 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருக்கும் இடது முன்னணிக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி உள்ளது.
வாக்குப் பதிவுக்காக 3 ஆயிரத்து 41 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 18 ஆயிரம் ஊழியர்கள் வாக்குப்பதிவில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அனைத்து தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்புடன் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை முதலே விறுவிறுப்பாக வாக்குகள் பதிவாகின.
பிற்பகலிலேயே 40% வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவு பெற்றது. 23.5 லட்சம் வாக்காளர்களில் 93% பேர் வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.
ஒருசில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. இந்த வாக்குகள் 28-ம்தேதி எண்ணப்படுகின்றன. 2008-ல் நடந்த தேர்தலில் 92% வாக்குகள் பதிவாகி இருந்தது. தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.