லண்டன், பிப்.15- பிரிட்டன் வாழ் இந்தியரான கேத் கான், நவீன ரக புடவைகளை, இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளார்.
பிரிட்டனில் வசிக்கும் இந்தியரான கேத் கான், புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர்.
கடந்த ஆண்டு நடந்த, லண்டன் ஒலிம்பிக் போட்டியின், கலாச்சார பிரிவு தலைவராக பணியாற்றியுள்ளார்.
மேலும், குயின்ஸ் கோல்டன் ஜூப்ளி காமன்வெல்த் அணிவகுப்பில் இயக்குனராகவும், மான்செஸ்டர் காமன்வெல்த் போட்டிகளின் தலைமை நிர்வாகியாகவும், பணிபுரிந்தவர்.
இதற்கிடையே, தான் வடிவமைத்துள்ள நவீன ரக புடவைகளை, கேத் கான், இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறார்.
மும்பையில் உள்ள கொலாபாவில், அடுத்த மாதம் 9ம்தேதி, நடைபெறும் “இந்தியா டிசைன் வீக்’ நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, இவர் வடிவமைத்த புடவைகள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.டிஜிட்டலில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புடவைகள், 25 ஆயிரம் ரூபாய் வரை விலை கொண்டவை.