Home வணிகம்/தொழில் நுட்பம் கோககோலா, பெப்சி குளிர்பானங்களில் வேதிப்பொருட்களை நீக்க அந்நிறுவனங்கள் முடிவு! 

கோககோலா, பெப்சி குளிர்பானங்களில் வேதிப்பொருட்களை நீக்க அந்நிறுவனங்கள் முடிவு! 

530
0
SHARE
Ad

pwpsi-cokநியூயார்க், மே 8 – அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல குளிர்பான நிறுவனங்களான கோககோலா மற்றும் பெப்சி பல்வேறு நாடுகளில் வெற்றிகரமாக தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகின்றன.

கோககோலா நிறுவனத்தின் பவரேட், ஃபாண்டா, பெப்சியின் கடோரேட், மவுண்டன் டியு போன்ற பல பானங்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கின்றன. இத்தகைய பானங்களில் குறிப்பிடப்படும் பழத்தின் சுவை சமமாகப் பரவுவதற்காக இவற்றில் பிராமினேட்டட் தாவர எண்ணெய் என்ற மூலப்பொருள் உபயோகிக்கப்பட்டு வருகின்றது.

இந்த எண்ணெய் தீ பரவாமல் இருப்பதற்காக மர சாமான்களின் மீது பூசப்படும் வேதிப் பொருட்களை போன்ற தன்மை உடையது என்ற ஒரு புகார் சமீபத்தில் மிஸிஸிப்பி மாகாணத்தில் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இத்தகைய வேதிப்பொருட்களின் உபயோகம் குளிர்பானங்களில் நீக்கப்படவேண்டும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளை பூர்த்தி செய்தபின்னரே இந்த எண்ணெய் தங்களின் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகின்றது என்று இந்த நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. இருப்பினும், மக்களின் இயற்கைப் பொருட்கள் பயன்பாட்டின் முன்னுரிமைக்கும், போட்டியாளர்களை எதிர்கொள்ளும்விதமாகவும் இரு நிறுவனங்களும் தங்களின் தயாரிப்புகளில் இந்த எண்ணெயைப் பயன்படுத்துவதை நிறுத்த இருப்பதாக நேற்றுமுன்தினம் அறிவித்துள்ளன.

நேற்றைய அறிக்கையில் பெப்சி, தங்களின் அனைத்து தயாரிப்புகளிலும் இதனை நீக்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் இதற்கான காலக்கெடுவை இரண்டு நிறுவனங்களுமே குறிப்பிடவில்லை.