Home இந்தியா பஞ்சாப் அணி அபார வெற்றி – மீண்டும் சென்னை தோல்வி!

பஞ்சாப் அணி அபார வெற்றி – மீண்டும் சென்னை தோல்வி!

473
0
SHARE
Ad

ipl 7கட்டாக், மே 8 – ஐ.பி.எல்.7 கிரிக்கெட்டில் மேக்ஸ்வெல்லின் ருத்ரதாண்டவத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சென்னை அணி மீண்டும் தோல்வியை தழுவியது. 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நேற்றிரவு அரங்கேறிய 29-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் சந்தித்தன.

டாஸ் வென்ற சென்னை கேப்டன் டோனி முதலில் பஞ்சாப்பை பேட் செய்ய பணித்தார். பஞ்சாப்பின் இன்னிங்சை பவுண்டரியுடன் ஷேவாக் தொடங்கினார். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் 4 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது. ஒட்டுமொத்தத்தில் ஓர் அணியின் 5-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

அடுத்து இமாலய இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெய்ன் சுமித் (4 ரன்) முதல் ஓவரிலேயே கேட்ச் ஆகி அதிர்ச்சி அளித்தார். 20 ஓவர்களில் சென்னை அணியால் 6 விக்கெட்டுக்கு 187 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

#TamilSchoolmychoice

ipl77இதன் மூலம் பஞ்சாப் அணி 44 ரன் வித்தியாசத்தில் 6-வது வெற்றியை பதிவு செய்தது. 8-வது ஆட்டத்தில் ஆடிய சென்னைக்கு இது 2-வது தோல்வியாகும். முதல் தோல்வியும் இதே பஞ்சாப்புக்கு எதிராகத் நிகழ்ந்தது. அப்போதும் மேக்ஸ்வெல் தான் வெற்றிக்கனியை தட்டிப்பறித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.