Home இந்தியா ஐபிஎல்7: சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா!

ஐபிஎல்7: சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா!

1201
0
SHARE
Ad

iplபெங்களூர், ஜூன் 2 – ஐபிஎல் டி20 தொடரின் 7வது சீசன் இறுதி ஆட்டத்தில், பஞ்சாப் அணியுடன் மோதிய கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

iplபெங்களூரில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீசியது. பஞ்சாப் தொடக்க வீரர்களாக சேவக், வோரா களமிறங்கினர். பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன் குவித்தது. சாஹா 115 ரன் (55 பந்து, 10 பவுண்டரி, 8 சிக்சர்), மில்லர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ipllஅடுத்து களமிறங்கிய கொல்கத்தா 19.3 ஓவரில் 3 விக்கெட் இழந்து வெற்றி இலக்கை தொட்டு, 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. பாண்டே அதிகபட்சமாக 50 பந்துகளில் 94 ரன்கள் விளாசினார். யூசுப் பதான் 4 சிக்சர்களுடன் 36 ரன்கள் எடுத்தார்.

#TamilSchoolmychoice

பஞ்சாப் பந்துவீச்சில் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையுடன் ரூ.15 கோடி (மலேசிய ரிங்கிட் 82,42,000) முதல் பரிசையும் தட்டிச் சென்றது. பாண்டே ஆட்ட நாயகன் விருது பெற்றார்.