Home இந்தியா ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் பஞ்சாப் குழுவிடம் தோல்வி

ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் பஞ்சாப் குழுவிடம் தோல்வி

1027
0
SHARE
Ad

vKings-XI-Punjabமும்பாய், மே 31 – நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் அரை இறுதி ஆட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடிய கிங்ஸ் ஆஃப் பஞ்சாப் குழுவினர், மகேந்திர சிங் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் குழுவினரைத் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.

நாளை ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் குழு கொல்கத்தா ரைடர்ஸ் குழுவைச் சந்திக்கும்.

virender-sehwag_post_1338025665பஞ்சாப் குழுவின் வீரேந்திர சேவாக்  அபாரமாக விளையாடி 58 பந்துகளில் 122 ஓட்டங்கள் எடுத்து தனது குழுவை முன்னணிக்கு கொண்டு வந்தார். முதல் கட்ட ஆட்ட முடிவில் பஞ்சாப் 226 ஓட்டங்கள் எடுத்து, 6 விக்கெட்டுகள் இழந்து ஆட்டத்தை நிறைவு செய்தது.

#TamilSchoolmychoice

சென்னை சூப்பர் கிங்ஸ் குழுவினரும், குறிப்பாக சுரேஷ் ரெய்னாவும் அதன் பிறகு சிறப்பாக ஆடினாலும், பஞ்சாப்பின் மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கையை அவர்களால் முறியடிக்க முடியவில்லை. மொத்தம் 202 ஓட்டங்களை மட்டுமே சென்னை குழுவால் எடுக்க முடிந்தது.

24 ஓட்டங்கள் வித்தியாசத்தில், ஏழு விக்கெட்டுகளை இழந்து சென்னை தோல்வியடைந்தது.