Home நாடு எங்களின் நட்புறவான அண்டை நாடு – சீனப் பிரதமர் புகழாரம்

எங்களின் நட்புறவான அண்டை நாடு – சீனப் பிரதமர் புகழாரம்

573
0
SHARE
Ad
பெய்ஜிங், மே 30 – சீனாவுக்கு வருகை தந்திருக்கும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வருகையை முன்னிட்டு அவரை வரவேற்றுப்  பேசிய மலேசியாவை ஒரு நட்புறவான அண்டை நாடாகவும் ஆசியானின் ஒரு முக்கிய பங்காளியாகவும் சீனா கருதுவதாக சீனப் பிரதமர் லீ கீ கியாங் கூறினார்.
Malaysia's Prime Minister Najib Razak speaks during a meeting in Beijing
நஜிப் துன் ரசாக்குடன் சீன அதிபர் சீ ஜின்பிங் கைகுலுக்குகின்றார்…
இரண்டு நாடுகளுக்கும் இடையே அரச தந்திர உறவுகள் மலர்ந்து 40 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் அதே சமயத்தில், மலேசியாவுடனான முக்கிய தொடர்புகளை வலுப்படுத்தவும்  அரசியல் நல்லெண்ண உறுதிப்பாட்டை மேலும் மேம்படுத்தவும் உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார வல்லரசாக விளங்கும் சீனா விரும்புகிறது.40 ஆண்டுகளுக்கு முன்னால் நஜிப்பின் தந்தையார் துன் ரசாக் உருவாக்கிய சீனாவுடனான அரச தந்திர உறவுகள் இன்று அவரது புதல்வர் நஜிப்பின் வாயிலாகத் தொடர்வது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தொடர்ச்சியாகும்.இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும், விரிவான  முக்கியத்துவம் வாய்ந்த பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதிலும் இணைந்த வளமான வளர்ச்சியை ஒன்றாக அடைவதிலும் ஒன்றிணைந்து பாடுபட இரண்டு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன  என்றும் லீ கூறினார்.பெய்ஜிங்கில் மலேசிய பிரதமர்  நஜீப் துன் ரசாக்குடன் வியாழக்கிழமை நடைபெற்ற இரு தரப்பு சந்திப்பின் போது லீ இதை குறிப்பிட்டார்.இருதரப்பு வர்த்தகம் 2017ஆம் ஆண்டிற்குள் 16,000 கோடி  அமெரிக்க டாலரை (51,440 கோடி மலேசிய வெள்ளி) எட்டவும், அடிப்படை வசதி நிர்மாணிப்பில் ஒத்துழைப்பை பலப்படுத்தவும் வர்த்தக, பொருளாதார ஒத்துழைப்பை இரண்டு நாடுகளும் விரிவுப்படுத்தும் என லீ நம்பிக்கை தெரிவித்தார்.இந்த வட்டாரத்தில் அமைதி, நிலைத்தன்மை, வளர்ச்சி ஏற்படவும் இரண்டு நாடுகளும் பாடுபடும் என்றும் சீனப் பிரதமர் லீ குறிப்பிட்டார்.எம்எச் 370 சம்பவத்தைப் பற்றி குறிப்பிட்ட லீ, அந்த காணாமல் போன விமானத்தைத் தேடுவதற்கான புதிய திட்டத்தை தயாரிப்பதில் மலேசியா முன்னணி வகிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

சீனப் பிரதமர் லீ கீ கியாங்குடன் வியாழக்கிழமை நடைபெற்ற இருதரப்பு கூட்டத்தில் 15 பேரடங்கிய குழுவுக்கு தலைமையேற்று  நஜீப் கலந்து கொண்டார்.

Malaysia's Prime Minister Najib Razak speaks during a meeting in Beijing
படங்கள்: EPA 

 

 

#TamilSchoolmychoice

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

epa04231978 Malaysia’s Prime Minister Najib Razak (L) shakes hands with China’s President Xi Jinping during a meeting at the Diaoyutai State Guesthouse in Beijing, China, 30 May 2014. EPA/JASON LEE / POOL