Home Featured வணிகம் சீனாவின் ஜேக் மா மலேசியாவின் ஆலோசகராக நியமனம்!

சீனாவின் ஜேக் மா மலேசியாவின் ஆலோசகராக நியமனம்!

809
0
SHARE
Ad

najib-jack-ma-china-visit

பெய்ஜிங் – சீனாவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமர் நஜிப் துன் ரசாக், சீனாவின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான அலிபாபா’வின் தலைவர் ஜேக் மா-வை மலேசியாவுக்கான மின்னியல் (டிஜிடல்) துறைக்கான ஆலோசகராக நியமித்துள்ளார்.

அலிபாபா என்ற இணையம் வழியான வணிக நிறுவனத்தை நடத்தி உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராகத் திகழ்பவர்  ஜேக் மா.

#TamilSchoolmychoice

“மலேசியாவில் மின்னியல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான புதிய ஆலோசகராக ஜேக் மா-வை வரவேற்கின்றோம். அவருடன் இணைந்து பணியாற்றுவதை மிகவும் எதிர்பார்க்கின்றேன்” என இவரது நியமனம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நஜிப் தெரிவித்துள்ளார்.

படம்: நன்றி – நஜிப் துன் ரசாக் டுவிட்டர் பக்கம்