பெய்ஜிங் – மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் சீனாவுக்கான ஆறு நாள் அதிகாரபூர்வ வருகையை முன்னிட்டு வரலாற்று பூர்வ அளவில் 14 உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டிருக்கின்றன. இவற்றின் மொத்த மதிப்பு 144 பில்லியன் ரிங்கிட்டாகும்.
இதுவரை தான் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களிலேயே மிக அதிகமான முதலீடுகளைக் கொண்டு வந்திருக்கும் பயணம் இதுதான் என்றும் அதனால், தனது பயணம் மாபெரும் வெற்றி என்றும் நஜிப் தெரிவித்தார்.
சீன வணிக நிறுவனங்களுடன் நடத்தப்பட்ட வட்ட மேசை மாநாட்டில் நஜிப் – அமைச்சர்கள், அதிகாரிகளுடன்….
மலேசியாவின் கிழக்குக் கடற்கரை இரயில் திட்டம், மலாக்கா கேட்வே திட்டம், பண்டார் மலேசியா திட்டம், சரவாக்கின் இரும்பாலை திட்டம், குவாந்தானிலுள்ள மலேசியா-சீனா தொழில் நகரத் திட்டம், பகாங், பெக்கான் நகரில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பசுமைத் தொழில்நுட்ப நகர் திட்டம், 200 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் மலேசியாவில் தொடங்கப்படவிருக்கும் சீனா கொன்ஸ்ட்ரக்ஷன் பேங்க் வங்கிக்கான அனுமதி, சீனாவின் மிகப் பெரிய இணைய வணிக நிறுவனமான அலிபாபா டாட் காம் நிறுவனத்துடனான திட்டங்கள், போன்றவை செய்து கொள்ளப்பட்டிருக்கும் உடன்படிக்கைகளில் அடங்கும்.
நஜிப்பின் வட்ட மேசை மாநாட்டில் திரளாகக் கலந்து கொண்ட சீனாவின் முன்னணி வணிக நிறுவனங்கள்…
சீன வணிகப் பிரமுகர்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்ட மதிய உணவு உபசரிப்பில் நஜிப் உரையாற்றுகின்றார்.
படங்கள்: நன்றி – டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் டுவிட்டர் பக்கம்