Home Featured நாடு மொகிதின் யாசின் மீது காவல் துறை விசாரணை!

மொகிதின் யாசின் மீது காவல் துறை விசாரணை!

661
0
SHARE
Ad

Tan-Sri-Muhyiddin-Yassin1

கோலாலம்பூர் – அமைச்சரவைக் கூட்டத்தின் குறிப்புகளை பகிரங்கமாக நாடாளுமன்றத்தில் அறிவித்த காரணத்தால், முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் 1972-ஆம் ஆண்டின் அதிகாரத்துவ ரகசியச் சட்டத்தை மீறியிருக்கின்றாரா என்பது குறித்து காவல் துறை அவர் மீது விசாரணை நடத்தவிருக்கின்றது.

பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து மலேசியா கட்சியின் தலைவருமான மொகிதின் யாசின் தன்னைக் கேள்வி கேட்க, காவல் துறையினர் அழைத்திருப்பதாகவும், விசாரணைக்கான தேதி இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்றும் இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசும்போது மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதே போன்று மேலும் இரண்டு அமைச்சர்கள் மீது அதிகாரத்துவ இரகசியச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படவிருக்கின்றது.

முன்னாள் இரண்டாவது நிதியமைச்சர், டத்தோஸ்ரீ ஹூஸ்னி ஹனாட்ஸ்லாவும் விசாரணைக்காக நேற்று காவல் துறை தலைமையகமான புக்கிட் அமானுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இருந்தாலும் இறுதி நேரத்தில் அந்த விசாரணை காவல் துறையினரால் இரத்து செய்யப்பட்டது.

மற்றொரு அமைச்சரான ஷாபி அப்டாலும் இதே போன்ற காவல் துறை விசாரணையை எதிர்நோக்கியுள்ளார்.