Home Featured கலையுலகம் கமலைப் பிரிந்து சமூக சேவையில் நுழையும் கௌதமி!

கமலைப் பிரிந்து சமூக சேவையில் நுழையும் கௌதமி!

888
0
SHARE
Ad

சென்னை – அண்மையில் கௌதமியின் டுவிட்டர் பக்கத்தை அலங்கரித்தது ஒரு வித்தியாசமான சந்திப்பு புகைப்படம்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கௌதமி அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கும் அந்த செய்தியைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த கௌதமி, தான் நடத்தி வரும் “லைப் எகேய்ன்” (மீண்டும் வாழ்க்கை – Life Again) என்ற சமூக நல இயக்கத்தின் பணிகள் குறித்து விவாதிக்கவே பிரதமரைச் சந்தித்ததாக கூறினார்.

பிரதமரைச் சந்தித்ததில் தான் உற்சாகமடைந்துள்ளதாகவும் கௌதமி கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

narendra-modi-gauthami-28-oct-2016

இந்த சந்திப்பு நடந்தது, வெள்ளிக்கிழமை அக்டோபர் 28-ஆம் தேதி. சுமார் அரை மணி நேரம் நடந்த சந்திப்பில், தனது இயக்கத்தின் மூலம் ஆற்றப் போகும் பணிகள் குறித்து விவரிக்க, பிரதமரோ, தனக்கு பலவிதமான ஆலோசனைகள் வழங்கியதாகவும், அவருக்கு அந்த அளவுக்கு நடப்பு விவரங்கள் தெரிந்திருப்பது குறித்து தான் ஆச்சரியமடைந்ததாகவும் கௌதமி கூறியிருக்கின்றார்.

புற்று நோயினால் பாதிக்கப்பட்டு மீண்ட கௌதமி, தன்னைப் போன்று புற்று நோய் கண்டு மறுவாழ்வு கண்டவர்களுக்காக ஆரம்பித்துள்ள இயக்கம்தான் லைஃப் எகேய்ன்.

நரேந்திர மோடியைச் சந்தித்த கையோடு, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவையும் சந்தித்தார் கௌதமி. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிறிது காலம் பாஜகவில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டவர் என்பதும் பலர் மறந்து போன கௌதமியின் இன்னொரு முகம்.

gauthami-venkaiah-naidu

வெங்கையா நாயுடுவுடன் கௌதமி…

கௌதமியின் இந்த சந்திப்புகள் எல்லாம் வழக்கமான மரியாதை நிமித்தமான சந்திப்புகள்தான் என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்க அடுத்த சில நாட்களில் வந்தது அதிரடியான அந்த செய்தி.

கமலைப் பிரிகிறார் கௌதமி என்ற செய்திதான் அது.

உடனடியாக தமிழக ஊடகங்கள் பிரிவுக்கான பின்னணியை ஆராய்ந்து பல்வேறு ஆரூடங்களை வெளியிட்டு வருகின்றன. கமலுக்கு புதிய காதல் பூத்துள்ளது – அதனால்தான் கௌதமி விலகுகின்றார் என்றும் சில செய்திகள் தெரிவிக்கின்றன.

கௌதமி இனி என்ன செய்யப் போகிறார்?

தனது மகளின் எதிர்கால வாழ்க்கையை பிரிவுக்கான காரணமாகச் சுட்டிக் காட்டியுள்ளார் கௌதமி. இருப்பினும் இத்தனை ஆண்டுகளாக கௌதமியின் மகளையும் தன் மகள்தான் என்ற ரீதியில் கமலஹாசன் பேட்டி கொடுத்து வந்திருப்பதை வைத்துப் பார்க்கும்போதும் – கமலஹாசன் மகள்களுடன் கௌதமி வெளி நிகழ்ச்சிகளில் காட்டி வந்த நெருக்கத்தை வைத்துப் பார்க்கும்போதும் – இது நம்பும்படியாக இல்லை.

gautami-life-again-foundation

லைஃப் எகேய்ன் இயக்கத்தின் பிரச்சார நிகழ்ச்சி அமெரிக்காவில் கடந்த பிப்ரவரியில் நடைபெற்றபோது, அதற்கான அழைப்பு

புற்று நோயிலிருந்து மீண்டவர்களுக்கான ‘லைஃப் எகேய்ன்’ என்ற இயக்கத்தின் வழி இனி கௌதமி தீவிரமாக சமூக சேவைகளில் ஈடுபடுவார் என்பது தெளிவாகத் தெரிகின்றது. கூடவே படங்களிலும் நடிப்பார் என்றும் தெரிகிறது. அவரது மகளையும் சினிமாவுக்குள் கொண்டு வருவாரா என்பது இனிமேல்தான் தெரியும்!

கமல்?

அவரது அடுத்த காதலி – துணைவி யார் – என்பது குறித்த ஆரூடங்கள் இனி தொடரும்!

-செல்லியல் தொகுப்பு