Home Featured இந்தியா ஐஎஸ் அச்சுறுத்தல்: இந்தியாவிலுள்ள அமெரிக்கர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை!

ஐஎஸ் அச்சுறுத்தல்: இந்தியாவிலுள்ள அமெரிக்கர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை!

656
0
SHARE
Ad

ISISsபுதுடெல்லி – இந்தியாவில் மேற்கத்தியர்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக, வெளியான ஊடகச் செய்திகளை அறிந்த அமெரிக்கா, இந்தியாவில் வசிக்கும் தங்கள் நாட்டு குடிமகன்களை எச்சரிக்கையுடன் இருக்கும் படி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்தியாவில் இருக்கும் அமெரிக்கத் தூதரகம் நேற்று நவம்பர் 1-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் மேற்கத்தியர்கள் அதிகம் உள்ள இடங்களில் அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

“இந்தியாவில் தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐஎல் திட்டமிடுவதாக அண்மைய இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, மேற்கத்தியர்கள் அதிகம் கூடும் இடங்களான புனித ஸ்தலங்கள், சந்தைகள் மற்றும் திருவிழா இடங்களில் அதிக அச்சுறுத்தல் உள்ளதாக அமெரிக்க தூதரகம் எச்சரிக்கிறது”

#TamilSchoolmychoice

“அனைத்து அமெரிக்கப் பிரஜைகளும் எப்போதும் அதிக விழிப்புணர்வுடன் இருப்பதோடு, தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அது தேசியத் துறையின் செப்டம்பர் 9, 2016 உலகளாவிய எச்சரிக்கையில் விளக்கமாக உள்ளது” என்று அமெரிக்கத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.