Home நாடு தெலுக் இந்தான் இடைத் தேர்தல்: மா சியூ கியோங் வெற்றி பெற்றால் அமைச்சரவைப் பதவி –...

தெலுக் இந்தான் இடைத் தேர்தல்: மா சியூ கியோங் வெற்றி பெற்றால் அமைச்சரவைப் பதவி – பிரதமர் வாக்குறுதி

489
0
SHARE
Ad

mah-siew-kபெய்ஜிங், மே 3 – நாளை நடைபெறும் தெலுக் இந்தான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில், கெராக்கான் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ மா சீயூ கியோங் வெற்றி பெற்றால் அவருக்கு அமைச்சரவைப் பதவி காத்திருக்கிறது எனப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கூறியுள்ளார்.

டத்தோ மா தெலுக் இந்தான் இடைத் தேர்தலில் வெற்றி பெற்றால் கெராக்கான் கட்சியின் தலைவர் எனும் முறையில் அவருக்கு அமைச்சரவைப் பதவி வழங்கப்படும் எனும் உறுதியை நான் வழங்குகின்றேன் என்று சீனாவுக்கு ஆறு நாள் வருகை மேற்கொண்டுள்ள தேசிய முன்னணியின் தலைவருமான நஜிப் தெரிவித்துள்ளார்.

“கெராக்கான் தேசிய முன்னணியில் ஆரம்ப காலம் முதல் இடம் பெற்றுள்ள கட்சியாகும். அவ்வகையில் கெராக்கான் கட்சித் தலைவருக்கு அமைச்சரவைப் பதவி வழங்குவது இதுவரை நடைமுறையில் இருந்து வருகிறது” என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

தெலுக் இந்தானில் பிறந்த மா (வயது 53) 1999 பொதுத் தேர்தலில் முதலாவதாக தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது ஜசெகவின் என்.ராஜேந்திரனுடனான நேரடிப் போட்டியில் மா 2,783 வாக்குப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

கெராக்கான் கட்சியின் இளைஞர் பிரிவு முன்னாள் தலைவரும் கெராக்கானின் தெலுக் இந்தான் தலைவருமான அவர் 2004 பொதுத் தேர்தலில் அத்தொகுதியை தக்கவைத்துக் கொண்டார். எனினும் 2008 அரசியல் சுனாமியில் மா தெலுக் இந்தான் தொகுதியைப் பறிகொடுத்தார்.

2013 பொதுத் தேர்தலில் தெலுக் இந்தான் தொகுதியை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் மா தோல்வி கண்டார். தற்போது ஜசெக வேட்பாளர் டயானா சோஃபியா முகமட் டாவுட்டுடன் நேரடிப் போட்டியில் களம் இறங்கியுள்ளார்.

இதற்கு முன்னால், கெராக்கான்  கட்சியின் தலைவர் என்ற முறையில் டான்ஸ்ரீ கோ சூ கூன் அமைச்சரவைப் பதவியை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.