Home நாடு தெலுக் இந்தானில் தோல்வி ஏன்? – ஜசெக ஆய்வு

தெலுக் இந்தானில் தோல்வி ஏன்? – ஜசெக ஆய்வு

706
0
SHARE
Ad

kulasegaran400px2_400_266_100கோலாலம்பூர், ஜூன் 15 –  நடந்து முடிந்த  தெலுக் இந்தான் இடைத்தேர்தலில் ஜசெக எதிர்பாராத தோல்வி கண்டதற்கான காரணங்களை  ஆய்வு செய்து கண்டறிந்துள்ளோம் என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தேசிய உதவித் தலைவருமான எம்.குலசேகரன் (படம்) தெரிவித்துள்ளார்.

1997ஆம் ஆண்டில் தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் எம்.குலசேகரன் வெற்றி பெற்றிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

“இத்தொகுதியில் வெற்றி பெறுவதற்கு ஒரு மாறுபட்ட வியூகத்தை நாம் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொண்டோம். வெளியில் உள்ள வாக்காளர்களை இங்குகொண்டு வருவதில் நாம் தோல்வி கண்டிருக்கின்றோம். இதனால் இந்த இடைத்தேர்தலில் நாம் வெற்றி பெற முடியாமல் போய் விட்டது” என்று குலசேகரன் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“இந்த இடைத்தேர்தலில் 52 விழுக்காடு இந்தியர்கள் ஜசெகவை ஆதரித்தனர். ஆனால் 2013 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 62 விழுக்காடாக இருந்தது. வெளியூர்களில் உள்ள வாக்காளர்கள் இடைத்தேர்தலில் வாக்களிக்க வராததால் இந்த சரிவு ஏற்பட்டிருக்கிறது என்பதை நாங்கள் கண்டு பிடித்துள்ளோம்” என்றார் அவர்.

தவறுகளை கண்டறிந்து அதன் மூலம் நாங்கள் சில அரசியல் பாடங்களைக் கற்றுக் கொண்டோம். அடுத்த முறை இத்தொகுதியை கைப்பற்ற இன்னும்  சிறப்பாக செயல்படுவோம் என்றார் அவர்.