Home நாடு “நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலை பேசப்படுகிறார்கள்” – குலசேகரன் காவல் துறை புகார்!

“நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலை பேசப்படுகிறார்கள்” – குலசேகரன் காவல் துறை புகார்!

636
0
SHARE
Ad

ஈப்போ : தனது ஆதரவை பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு வழங்குவதற்காக இலஞ்சம் தருவதற்கு தான் அணுகப்பட்டதாக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.குலசேகரன் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்பில் காவல் துறையில் புகார் ஒன்றை குலசேகரன் செய்துள்ளார்.

அவர் ஜனநாயக செயல் கட்சியின் உதவித் தலைவருமாவார்.

#TamilSchoolmychoice

இந்த விவகாரம் ஊழல் தடுப்பு ஆணையத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த போலீஸ் புகாரை குலசேகரனின் செயலாளர் ஜெரமி சுவா ஈப்போவில் செய்துள்ளார். இந்தப் புகார் மேல் நடவடிக்கைக்காக ஊழல் தடுப்பு ஆணையத்தின் பார்வைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

இதே போன்ற மேலும் இரண்டு புகார்கள் கெடாவிலும், பினாங்கிலும் செய்யப்பட்டுள்ளன.