Home நாடு குலசேகரன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் – தக்கியூடின், இட்ருஸ் ஹாருண் மீது நடவடிக்கை தேவை

குலசேகரன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் – தக்கியூடின், இட்ருஸ் ஹாருண் மீது நடவடிக்கை தேவை

658
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாடாளுமன்றம் திங்கட்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் நாடாளுமன்றத்தைத் தவறான முறையில் வழி நடத்தியதற்காகவும், மாமன்னருக்கு எதிராக தேச நிந்தனை குற்றம் புரிந்ததற்காகவும், சட்டஅமைச்சர் தக்கியூடின் ஹாசான், சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹாருண் இருவர் மீதும் கடுமையான நடவடிக்கை தேவை என ஜசெக உதவித் தலைவரும், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.குலசேகரன் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்பில் இன்று அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தக்கியூடின் ஹாசான், இட்ருஸ் ஹாருண் இருவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்துள்ளதாகவும் குலசேகரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில்,திங்கட்கிழமை கொவிட்-19 தொற்றுகளைக் காரணம் காட்டி நாடாளுமன்றம் மீண்டும் ஒத்தி வைக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

பிரதமர் மொகிதின் யாசின் அமைச்சரவை பதவி விலக வேண்டும் என்ற அறைகூவல்களும் எழுந்திருக்கின்றன. நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்கள் மன்றம் இந்த அறைகூவலை விடுத்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.