Home நாடு கோபால் ஶ்ரீராம் : “அமைச்சரவை முடிவுக்கு மாமன்னர் கையெழுத்து தேவையில்லை”

கோபால் ஶ்ரீராம் : “அமைச்சரவை முடிவுக்கு மாமன்னர் கையெழுத்து தேவையில்லை”

573
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அரசியல் திருப்பங்கள், நாடாளுமன்ற விவாதங்கள், மாமன்னர் அறிக்கை, அந்த அறிக்கைக்கான பிரதமர் அலுவலகத்தின் பதில் அறிக்கை – இவற்றைத் தொடர்ந்து பல்வேறு சட்ட வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையைத் தொடர்ந்து நாட்டின் முன்னணி வழக்கறிஞரும் முன்னாள் கூட்டரசுப் பிரதேச நீதிமன்ற நீதிபதியுமான கோபால் ஶ்ரீராம் முக்கியமான கருத்தொன்றைத் தெரிவித்திருக்கிறார்.

“அமைச்சரவை செய்த முடிவு மாமன்னர் கையெழுத்திட்டால்தான் செல்லுபடியாகும் என்பது சரியில்லை.அதற்குத் தேவையுமில்லை.சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த வழக்கில் (1963-இல்) அமைச்சரவை மாமன்னரின் பெயரால் செயல்படுவதால் அதன் முடிவுகளுக்கு மாமன்னரின் கையெழுத்து என்பது தனியாகத் தேவையில்லை எனத் தீர்ப்பளித்திருக்கிறார். அப்போதைய கிளந்தான் மாநில அரசாங்கத்திற்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையிலான வழக்கில் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது” என ஶ்ரீராம் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

ஆனால் அதே சமயத்தில் மற்றொரு வழக்கறிஞரான ஜி.கே.கணேசன் (படம்) “நாட்டின் சட்டங்களை உருவாக்கும் அல்லது அகற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே இருக்கிறது. அமைச்சரவைக்கு அந்த அதிகாரம் இல்லை”  எனத் தெரிவித்திருக்கிறார்.

எனவே, அவசரகால சட்டங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கணேசன் வலியுறுத்தியிருக்கிறார்.