Home நாடு இந்தியர்களின் வாக்கு தேமு பக்கம் திரும்பியிருக்கிறது – பழனிவேல்

இந்தியர்களின் வாக்கு தேமு பக்கம் திரும்பியிருக்கிறது – பழனிவேல்

723
0
SHARE
Ad

Palanivel-and-MIC-300x202கோலாலம்பூர், மே 2 – தெலுக் இந்தான் தொகுதியில் இந்தியர்களின் வாக்கு கடந்த பொதுத்தேர்தலைக் காட்டிலும் உயர்ந்துள்ளதாக ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத்தேர்தலில் 45 சதவிகிதமாக இருந்த இந்தியர்களின் வாக்குகள், இந்த இடைத்தேர்தலில் 70 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்று பழனிவேல் குறிப்பிட்டார்.

இதன் மூலம் எதிர்கட்சியின் பக்கம் இருந்த பல இந்தியர்களின் வாக்குகள் தேசிய முன்னணியிடம் திரும்பி இருப்பதில் தனக்கும் மிகவும் மகிழ்ச்சி என்றும், தெலுக் இந்தான் தொகுதி மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பழனிவேல் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice