Home நாடு மக்கள் கூட்டணி கிராமப்புறங்களை சென்றடைய வேண்டும் – அன்வார்

மக்கள் கூட்டணி கிராமப்புறங்களை சென்றடைய வேண்டும் – அன்வார்

599
0
SHARE
Ad

MALAYSIA POLITICS ELECTIONSபினாங்கு, ஜூன் 2 – தெலுக் இந்தான் தொகுதியில் நகர்புற மக்களை எளிதில் சென்றடைய முடிந்த மக்கள் கூட்டணியால், கிராமப்புறங்களில் ஊடுருவ முடியவில்லை என்று எதிர்கட்சித்தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

“ஆர்டிஎம், டிவி 3 போன்ற ஊடகங்கள், தொடர்ச்சியாக ஜசெக கட்சியை குறை கூறி, அக்கட்சி மிகவும் ஆபத்தானது, அடக்குமுறை மிகுந்தது என செய்திகளை ஒளிபரப்பின.அதை கிராப்புற மக்கள் நம்புகின்றனர். எனவே மக்கள் கூட்டணி கிராமப்புற மக்களை சென்றடைய வேண்டும்” என்று அன்வார் கூறியுள்ளார்.

மேலும், தெலுக் இந்தான் தொகுதியில் நகர்புறங்களில் ஜசெக கட்சிக்கு மிகவும் ஆதரவு கிடைத்தது என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த நிலையை மாற்றியமைத்து தேசிய முன்னணியின் செல்வாக்கை முறியடிக்க வேண்டும் என்றும் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

படம்: EPA