நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இரண்டாக பிரிக்கப்பட்ட ஆந்திராவின் தெலுங்கானா மாநில முதல் அமைச்சராக சந்திரசேகர ராவ் இன்று திங்கட்கிழமை காலை 8.15 மணிக்கு ஐதராபாத்திலுள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார்.
இந்திய திருநாட்டின் 29-ஆவது மாநிலத்தின் முதல் அமைச்சராக அவர் பதவியேற்றார். மேலும் இம்மாநிலத்தில் முதலாவது முதல் அமைச்சராக ராவ் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆந்திர ஆளுநராக உள்ள நரசிம்மன் தெலுங்கானா ஆளுநராக பொறுப்பேற்றுக்கொள்வார். மேலும் அங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள அதிபர் ஆட்சி திரும்ப பெறப்படும்.
தெலுங்கானா அல்லாத ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் கட்சியின் அரசு ஒரு வாரத்துக்கு பின்பே பதவியேற்கவுள்ளது.