Home Featured உலகம் டாக்டர் சுப்ரா – தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சீனாவில் சந்திப்பு!

டாக்டர் சுப்ரா – தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சீனாவில் சந்திப்பு!

664
0
SHARE
Ad

Dr Subra-Dalian-China-Chandrasekar Raoடாலியான் (சீனா) – இங்கு உலகப் பொருளாதார மாநாட்டின் ஒரு பிரிவாக சுகாதாரத் துறை குறித்த மாநாடு தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த மாநாட்டில் மலேசிய சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் கலந்து கொண்டுள்ளார்.

இதே மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கும் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மற்றும் அவரது குழுவினரை டாக்டர் சுப்ரா மாநாட்டின் இடைவேளையின் போது சந்தித்து அளவளாவினார்.

ஆந்திராவிலிருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானாவின் முதல் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஆவார்.

#TamilSchoolmychoice

இருதரப்புகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன்கள் குறித்து டாக்டர் சுப்ராவும், சந்திரசேகர் ராவும் தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dr Subra-Dalian-China-Chandrasekar Rao-2