Home Uncategorized 3-வது அணியைத் தொடங்க முக ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்திப்பா?

3-வது அணியைத் தொடங்க முக ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்திப்பா?

832
0
SHARE
Ad

சென்னை: இந்திய மக்களவை தேர்தல் முடிவுகள் இன்னும் கொஞ்ச நாட்களில் எண்ணப்பட இருக்கும் நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி பேச்சுவார்த்தைகளை அனைத்துக் கட்சிகளுமே ஆரம்பித்துவிட்டன.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்து பேச இருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அவ்வகையில் இருவரும் இன்று திங்கட்கிழமை சந்திக்க உள்ளனர்.  

தேர்தல் முடிவுக்குப் பிறகு பாஜக, காங்கிரஸ் என்று இரண்டு கட்சியும் இல்லாத ஓர் அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வரும், ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ் முடிவெடுத்துள்ளார்

#TamilSchoolmychoice

அண்மையில்சந்திரசேகர் ராவை சந்திப்பதற்கு ஸ்டாலின் மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், தொடர்ந்து ஸ்டாலினை சந்திப்பதற்கு முயற்சித்து சந்திரசேகர் ராவ், இன்று உள்நாட்டு நேரப்படி மாலை 4 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் சந்திக்கிறார்