Home நாடு காவல் துறை துணைத் தலைவராக டத்தோ மஸ்லான் மன்சோர் நியமனம்!

காவல் துறை துணைத் தலைவராக டத்தோ மஸ்லான் மன்சோர் நியமனம்!

738
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டத்தோ மஸ்லான்மான்சோர்காவல் துறை துணைத் தலைவராக கடந்த மே 9-ஆம் தேதி நியமிக்கப்பட்டதாக உள்துறைஅமைச்சர் மொகிதின் யாசின் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

புக்கிட் அமான் வர்த்தகரீதியான குற்ற விசாரணைப் பிரிவின் தலைவராகப் பணியாற்றிய மஸ்லான், இரண்டு மாதக் காலமாக காலியாக இருந்த மலேசிய காவல் துறைத் துணைத் தலைவர் பதவிக்கு  நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமணத்திற்கான கடிதம் இன்று அவருக்கு கொடுக்கப்பட்டது. மாமன்னரின் ஒப்புதலுக்கு இணங்க டத்தோ மஸ்லான் மன்சோர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

ஒவ்வொரு மாநிலத்தின் பிரச்சனைகளையும் கண்டறிந்து, அவற்றை சட்ட ரீதியாக நடைமுறைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், புத்திசாலித்தனமாகவும் மனிதாபிமான அடிப்படையில் அப்பிரச்சனைகளுக்குத் தீர்வுக் காணவும் உள்நாட்டு அமைச்சு காவல் துறையுடன் இணைந்து செயல்படும் என மொகிதின் தெரிவித்தார்.