Home இந்தியா “மரியாதை நிமித்தமாக சந்திரசேகர் ராவை சந்தித்தேன்!”- மு.க.ஸ்டாலின்

“மரியாதை நிமித்தமாக சந்திரசேகர் ராவை சந்தித்தேன்!”- மு.க.ஸ்டாலின்

746
0
SHARE
Ad

சென்னை: இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் வேளையில் மூன்றாவது அணியை உருவாக்க முயற்சித்து வரும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் திமுக தலைவர் மு..ஸ்டாலினுக்கு இடையிலான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவ் காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது கூட்டணியை ஏற்படுத்தும் முயற்சியில் பல்வேறு மாநிலக் கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார். அவ்வகையில் கேரளா முதல்வர் பினராயி விஜயனை கடந்த சில தினங்களுக்கு முன்னர் சந்தித்த சந்திரசேகர் ராவ் நேற்று திங்கட்கிழமை திமுக தலைவர் மு..ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் மாலை 4.30 மணிக்குத் தொடங்கிய இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் வரை நடைபெற்றது.  இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என ஸ்டாலின் தனது செய்தி குறிப்பில் விளக்கம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.