Home நாடு சாம்ரி வினோத்: “பிறர் வீட்டினுள் நுழைவதற்கு முன் விதிமுறைகளை அறிந்திருக்கவும்!”- மசூதி பொருளாளர்

சாம்ரி வினோத்: “பிறர் வீட்டினுள் நுழைவதற்கு முன் விதிமுறைகளை அறிந்திருக்கவும்!”- மசூதி பொருளாளர்

1378
0
SHARE
Ad

சிரம்பான்: அண்மையில் எப்எம்டி நிருபர்களை அழைத்து தம்மை பேட்டிக் காணுமாறு சாம்ரி வினோத் அழைத்ததன் பேரில் எப்எம்டியிலிருந்து ஒரு முஸ்லிம் நிருபரும், இரு முஸ்லிம் அல்லாத நிருபர்களும் சிரம்பானில் அமைந்துள்ள மசூதி ஒன்றுக்கு சென்றிருந்ததாக எப்எம்டி காணொளி ஒன்றினை பதிவிட்டிருந்தது.

அந்த நேர்காணல் நடந்து கொண்டிருக்கும் போது, மசூதியிலிருந்த ஒருவர் அதனை நிறுத்துமாறு நல்லமுறையில் கூறினார்.

“இங்கு நேர்காணல் செய்வதால் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமா? இல்லை என்று நினைக்கிறேன்” என சாம்ரி அவருக்கு பதிலளித்தார். அதனைத் தொடர்ந்து இந்த நேர்காணலை கீழே நடத்த இயலுமா என அவர் வினவியபோது, சாம்ரி அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பின்னர், நேர்காணல் தொடர்ந்து நடத்தப்பட்ட போது, மசூதியின் பொருளாளர் (சாம்ரி கூறியதன் அடிப்படையில்) நேர்காணலை நிறுத்துமாறு அதட்டினார்.

“மக்கள் தொழுகைக்காக வரும் நேரம். இந்நேரத்தில் மசூதியில் அமர்ந்து தொந்தரவு செய்வது சரியானதல்ல” என அவர் கூறினார்.  அதற்கு பதிலளித்த சாம்ரி, “ஹாஜி, தாங்கள் எப்படி பேசுவதென்று முதலில் கற்றுக் கொள்ளுங்கள். இங்கு இஸ்லாமியர் அல்லாதவர்கள் உள்ளனர். அவர்களின் முன்னால் இஸ்லாம் மீது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தாதீர்கள்” என கூறினார்.

“முதலில், ஒருவரின் வீட்டினுள் நுழைவதற்கு முன் அவ்வீட்டின் விதிமுறைகள் என்னவென்று தெரியுமா? இங்கு நேர்காணலை நடத்த எங்களிடம் அனுமதி பெற்றீர்களா?” என அவர் கடிந்து சொன்னார்.

அதற்கு பிறகு வரும் காட்சியில், “இதன் மூலமாக கடவுள் ஏதோ சொல்ல முற்படுகிறார்” என சாம்ரி வினோத் சிரித்துக் கொண்டே கூறுகிறார்.

சாம்ரி வினோத்தின் பிற மதங்களை குறித்து பேசும் போக்கினால் அண்மையக் காலமாக இஸ்லாமியர் அல்லாதவர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.