Home கலை உலகம் இந்தியன் 2: கமலை நம்புவது, கயிறில்லாமல் ஆற்றில் இறங்குவதற்கு சமம்!

இந்தியன் 2: கமலை நம்புவது, கயிறில்லாமல் ஆற்றில் இறங்குவதற்கு சமம்!

1063
0
SHARE
Ad

சென்னை: கடந்த 1995-ஆம் ஆண்டில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை சங்கர் மீண்டும் கமலை வைத்து உருவாக்க திட்டமிட்டு அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன.

படம் ஆரம்பித்த அன்றிலிருந்து பல விதமாக சர்ச்சைகள் சமூகப்பக்கங்களில் பரவத் தொடங்கின.

கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லை என்று வேலைகளை அப்படியே நிறுத்திவிட்டதாக கூறப்பட்டது. பின்னர் கமல்ஹாசன் தோற்றத்தில் ஹாலிவுட் ஒப்பனைக் கலைஞர்களை வைத்து மாற்றம் செய்ததாகவும், அதன் பிறகு, தேர்தல் வேலைகளில் கமல்ஹாசன் ஈடுபட்டதால் மேலும் தாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டு வந்தது. இவற்றை மறுத்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து இப்படம் படப்பிடிப்பில் இருக்கும் எனக் கூறியது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், விஜய் டிவி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது பாகத்தையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியை அடுத்த மாதத்தில் இருந்து தொடங்க உள்ளனர். மூன்று மாதங்களுக்கு மேல் இந்த நிகழ்ச்சியில் கமல் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து தேவர் மகன் 2 படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனாலேயே, இந்தியன் 2 படம் கைவிடப்பட்டு விட்டதாக மீண்டும் தகவல் பரவி உள்ளது. இந்த தகவலை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.