Home இந்தியா ஐபிஎல் 7: கொல்கத்தா – பஞ்சாப் இன்று இறுதிப்போட்டி – கோப்பையை வெல்வது யார்?

ஐபிஎல் 7: கொல்கத்தா – பஞ்சாப் இன்று இறுதிப்போட்டி – கோப்பையை வெல்வது யார்?

951
0
SHARE
Ad

iplபெங்களூர், ஜூன் 1 – 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு (மலேசிய நேரம் 10.30 மணிக்கு) நடக்கிறது.

இதில் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் – பெய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

கொல்கத்தா அணி 2–வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி ஏற்கனவே 2012–ஆம் ஆண்டு வெற்றியாளர் பட்டம் பெற்றிருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமே 2 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்று இருக்கிறது. அந்த வரிசையில் கொல்கத்தா அணி இணையுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்த தொடரில் அதிக ரன் எடுத்து முதலிடத்தில் இருக்கும் ராபின் உத்தப்பா அந்த அணியில் உள்ளார். அவர் 655 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் யூசுப் பதான், கேப்டன் காம்பீர் போன்ற அதிரடி பேட்ஸ் மேன்கள் அந்த அணியில் உள்ளனர்.

ipllவெஸ்ட்இண்டீசை சேர்ந்த சுனில் நரீன் அந்த அணியின் பந்துவீச்சில் முதுகெலும்பாக திகழ்கிறார். அவர் 20 விக்கெட் கைப்பற்றியுள்ளார். இன்றைய ஆட்டத்தில் அவரது பங்களிப்பு முக்கியத்துவம் பெற்று இருக்கும்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதல் முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி 2008–ஆம் ஆண்டு அரை இறுதிக்கு முன்னேறியது. அதன்பிறகு இந்த ஐ.பி.எல். போட்டியில் தான் அந்த அணி உயர்ந்த நிலையை எட்டியுள்ளது.

இதற்கு மேக்ஸ்வெல், மில்லர், ஷேவாக், வோரா, கேப்டன் பெய்லி ஆகியோரின் அதிரடியான ஆட்டமே காரணமாகும். கொல்கத்தாவை வீழ்த்தி ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றுவதற்கான வாய்ப்பில் பஞ்சாப் முன்னிலையில் இருக்கிறது.

இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.