Home இந்தியா ஐபிஎல்7: மும்பையை வீழ்த்தியது சென்னை!

ஐபிஎல்7: மும்பையை வீழ்த்தியது சென்னை!

752
0
SHARE
Ad

iplமும்பை, மே 29 – நேற்று நடந்த 7 வது ஐ.பி.எல் பிளே ஆப் போட்டியில் சென்னை சூப்பர் கிங், மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து,  மும்பை அணியில் சிம்மன்சும், ஹசியும் களம் இறங்கினர். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற, இலக்குடன் சென்னை அணி தனது இன்னிங்சை துவக்கியது. 19-வது ஓவரிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்து, சென்னைஅணி மும்பை அணியை எலிமினேட்டர் சுற்றில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

ipl7நாளை சென்னை அணி பஞ்சாப் அணியுடன் மோத உள்ளது. இதில் வெற்றிபெறும் அணி, இறுதி போட்டியில் கொல்கத்தாவை சந்திக்கும். பஞ்சாப் அணியுடன் நடந்த இரு போட்டிகளிலும் ,சென்னை அணி தோல்வியை தழுவியதால், நாளைய ஆட்டத்தில் சென்னை அணி தனது ஆட்டத் திறனை முழுமையாக வெளிப்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice