Home நாடு எம்எச் 370 நிச்சயம் தென் இந்தியப் பெருங்கடலில் இல்லை – ஆஸ்திரேலியா திட்டவட்டம்

எம்எச் 370 நிச்சயம் தென் இந்தியப் பெருங்கடலில் இல்லை – ஆஸ்திரேலியா திட்டவட்டம்

650
0
SHARE
Ad

bluefin-pings-reuters-290514_540_384_100சிட்னி, மே 29 – கடந்த ஏப்ரல் மாதம், இந்தியப் பெருங்கடலின் ஆழத்தில், மாயமான எம்எச் 370 மலேசிய விமானத்தின் கறுப்புப் பெட்டியில் இருந்து ஒலி சமிஞைகள் கிடைப்பதாக கண்டறியப்பட்ட இடத்தில், நிச்சயமாக விமானம் இல்லை என்ற முடிவுக்கு ஆஸ்திரேலியா வந்துள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலிய கூட்டு முகமை ஒருங்கிணைப்பு மையம் (Joint Agency Coordination Centre) சார்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தேடுதல் பணியில் ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் (The Australian Transport Safety) கண்டறிந்த விமானத்தின் ஒலி சமிஞைகள் கிடைத்த இடம் ‘விமானம் இறுதியாக விழுந்த இடம் இல்லை’ என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என அறிவித்துள்ளது.

இதன் காரணமாக அவ்விடத்தில் கடலின் அடிப்பரப்பில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்த புளுஃபின் -21 நீர்மூழ்கி இயந்திரம், நேற்றோடு தனது தேடுதல் பணியை நிறைவு செய்தது.

#TamilSchoolmychoice

இதுவரை கண்டறியப்பட்ட தகவலின் படி, அந்த இடத்தில் இருந்து விமானத்தின் பாகங்கள் என எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும், கடலுக்கடியில் விமானத்தின் பாகங்கள் இருக்கலாம் என்று நம்பப்பட்ட ஆழ்கடல் பகுதியில், சுமார் 850 ஸ்கொயர் கிலோமீட்டர்கள் வரை புளுஃபின் -21 பயணம் செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆஸ்திரேலியா நேற்றோடு தென் இந்தியப் பெருங்கடலில் தனது தேடுதல் பணியை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அடுத்தக்கட்ட தேடுதல் பணி மீண்டும் ஆகஸ்டில் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.