கோலாலம்பூர், மே 29 – மலேசிய உத்தமம் நிறுவனமும், தியான் டிஜிட்டல் திட்டமும் இணைந்து கோலாலம்பூர் டான்ஸ்ரீ சோமா அரங்கில், வரும் மே 31-ம் தேதி, சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் மதியம் 3.30 மணி வரை, கட்டற்ற மென்பொருள் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளனர்.
இது குறித்து மலேசிய உத்தமம் நிறுவனத்தின் தலைவரான சி.ம.இளந்தமிழ் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில், “இந்நிகழ்வை வழிநடத்த தமிழ் கட்டற்ற மென்பொருள் முன்னோடிகளான தமிழ்நாட்டைச் சேர்ந்த சீனிவாஸ், இரவிசங்கர் மற்றும் ஜப்பானில் இருந்து அருண்குமார் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதன் மூலம் தமிழில் செயல்படும் விக்கீபீடியா, கட்டற்ற மென்பொருள் மற்றும் அத்துறை சார்ந்த வல்லுநர்கள் ஆகியோர் குறித்து அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு குறித்த மேல் விவரங்களை, www. infittmalaysia.org என்ற இணையப்பக்கத்தை வலம் வருவதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கோலாலம்பூரைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சி வரும் ஜூன் 1 -ம் தேதி பேராக் மாநிலம் தைப்பிங்கிலும் நடைபெறவுள்ளது.
இலவசமாக நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம் என்று ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கோலாலம்பூர் நிகழ்வு:-
தலைப்பு : கட்டற்ற மென்பொருள் கருத்தரங்கு 2014
நாள் : 31-5-2014, சனிக்கிழமை
நேரம் : காலை 8.30 மணி தொடங்கி 3.30 மணி வரை
இடம் : டான்ஸ்ரீ சோமா அரங்கம், விஸ்மா துன் சம்பந்தன், கோலாலம்பூர்.
தைப்பிங் நிகழ்வு:-
தலைப்பு : கட்டற்ற மென்பொருள் கருத்தரங்கு 2014
நாள் : 01-6-2014, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 8.30 மணி தொடங்கி 1.35 மணி வரை
இடம் : எஸ்.ஜெ.கே செயிண்ட் தெரேஸா பள்ளி, தைப்பிங், பேராக்.