Home தொழில் நுட்பம் கூகுள் லூன் திட்டத்திற்கான பலூன்களை குத்தகைக்கு விட கூகுள் முடிவு! 

கூகுள் லூன் திட்டத்திற்கான பலூன்களை குத்தகைக்கு விட கூகுள் முடிவு! 

608
0
SHARE
Ad

Project-Loonமே 8 – உலக அளவில் இணையம் தொடர்பான தொழில்நுட்பங்களில் முன்னோடியாகத் திகழும் கூகுள் நிறுவனம், பலூன்கள் மூலமாக கம்பியில்லா இணைய இணைப்பு (Wireless Internet)-, உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் வழங்குவதற்கு ஏற்கனவே தீர்மானித்து, அதற்கான நடைமுறைச் செயல்பாடுகளை செயல்படுத்தி வந்தது.

‘கூகுள் லூன்’ (Google Loon) என்று பெயரிடப்பட்ட இந்த திட்டத்தின் அடிப்படையில், ஒவ்வொரு நாடுகளுக்கும் வானில் பறக்கும் பலூன்களிலிருந்து அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் இணைய இணைப்பினை பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்கான பலூன்களை ‘டெல்காஸ்’ (telcos) தொழில்துறை நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட கூகுள் நிறுவனம் முடிவுசெய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

மூன்றாம் தலைமுறை (3G) வலையமைப்பு சேவையினை வழங்கவுள்ள இந்த பலூன்கள் பூமியிலிருந்து 20 மைல்கள் தூரத்தில் நிறுவப்படவுள்ளன.

இதற்கான காணொளிக் காட்சிகளைக் கீழ்காணும் இணைப்புகளின் மூலம் காணலாம்: