Home உலகம் பெல்ஜியம் விமான நிலையத்தில் துப்பாக்கி முனையில் வைரம் கொள்ளை

பெல்ஜியம் விமான நிலையத்தில் துப்பாக்கி முனையில் வைரம் கொள்ளை

646
0
SHARE
Ad

belgiumபிரசல்ஸ், பிப். 20- பெல்ஜியம் நாட்டின், பிரசல்ஸ் விமான நிலையத்தில், 2,500 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நகைகளை கொள்ளையர்கள், துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகர விமான நிலையத்தில், சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிஜ் நகருக்கு செல்ல வேண்டிய விமானத்தில், நகைகள் ஏற்றப்பட இருந்தது. இதற்காக, பெரிய கண்டெய்னர் லாரி, விமானத்துக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது விமான நிலையத்தின் வேலியை தாண்டி, முகமூடி அணிந்த, நவீன ஆயுதங்களை ஏந்திய கொள்ளையர்கள் உள்ளே வந்தனர்.

#TamilSchoolmychoice

வைர நகைகள் வைக்கப்பட்டிருந்த லாரியை கிளப்பி கொண்டு, விமான நிலைய சோதனை சாவடியில் நின்றிருந்த காவலர்களை, துப்பாக்கியை காட்டி மிரட்டி விட்டு பறந்தனர்.

கொள்ளையர்கள், 2,500 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை சுருட்டி சென்றதாக கூறப்படுகிறது. கொள்ளையர்களை தேடும் முயற்சியில், பெல்ஜியம் காவல் துறையினர்  தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.