இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகும் அவர் உடல் நிலையில் தொடர்ந்து சிக்கல்கள் இருந்து வந்தது.
எனவே அவருக்கு கடந்த இரண்டு மாதங்களாக புதிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த பிப்ரவரி 16-ம் தேதி அவரின் புகைப் படங்களை வெனிசுலா அரசு வெளியிட்டது.
இந்நிலையில் வெனிசுலா அதிபர் சாவேஸ் நேற்று நாடு திரும்பி உள்ளார். இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் அவரை 4 மில்லியன் மக்கள் பின் தொடர்கிறார்கள். சுவாசப் கோளாறினால் அவரால் பேச முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் மக்களுடன் தொடர்பு கொள்வதற்காக இந்த டுவிட்டர் பக்கத்தை 2010-ம் ஆண்டு தொடங்கினார்.
லத்தீன் அமெரிக்க நாடுகளிலுள்ள மற்ற இடது சாரி தலைவர்களை ஊக்குவிப்பதற்காகவும் இந்த டுவிட்டர் தளத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்தார்.
சாவேஸ் குணமடைந்து நாடு திரும்பியதை அந்நாட்டு மக்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.