Home உலகம் சீனாவில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்: 8 பேர் காயம், மக்கள் பீதி

சீனாவில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்: 8 பேர் காயம், மக்கள் பீதி

530
0
SHARE
Ad

chinaசீனா, பிப்.20- சீனாவின் தென்மேற்கு எல்லை பகுதியில் உள்ள சிசுயான் மற்றும் யுனான் பகுதியில் நேற்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சில வினாடிகள் ஏற்பட்ட அதிர்வுகளால் சிசுயான் பகுதியிலுள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதில் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு தெருக்களில் ஓட்டம் பிடித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை 8 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் இவர்களில் 2 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே நிலநடுக்கம் 4.9 ரிக்டேரில் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலநடுக்கம் காரணமாக சிசுயான் பகுதியில் பல இடங்களில் கடைகள் மற்றும் மால்கள் மூடப்பட்டுள்ளன.