பெய்ஜிங், ஆகஸ்ட் 2 – கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள குன்ஷா நகரில் இயங்கி வரும் உலோக தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 65-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
குன்ஷன் நகரில் அமெரிக்க வாகனங்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் உலோக தொழிற்சாலையில் இன்று காலை எதிர்பாரதவிதமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையின் குறிப்பிட்ட பகுதியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். கரும்புகையுடன் ஏற்பட்ட வெடி விபத்தில் 40 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
தகவல் அறிந்தவுடன் விரைந்து வந்த மீட்புப் படையினர் புகை மண்டலமாக காட்சி அளித்த தொழிற்சாலைக்குள் நுழைந்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவர்களில் 20-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.