Home இந்தியா ஜெயலலிதாவைப் பற்றிய அவதூறு கட்டுரை: சென்னை இலங்கை தூதரகம் முன்பு மக்கள் முற்றுகை!

ஜெயலலிதாவைப் பற்றிய அவதூறு கட்டுரை: சென்னை இலங்கை தூதரகம் முன்பு மக்கள் முற்றுகை!

744
0
SHARE
Ad

சென்னை, ஆகஸ்ட் 2 – இலங்கை அரசு இணையத்தளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும், மோடியையும் இணைத்து சர்ச்சைக்குரிய படத்துடன் கூடிய கட்டுரை வெளியிடப்பட்டதைக் கண்டித்து, இன்று சென்னை இலங்கை தூதரக அலுவலகம் முன்பு அதிமுக உட்பட பல்வேறு கட்சியினர் ஒன்று கூடி முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

இலங்கை இணையத்தளத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், காவல்துறையினர் அவர்களை சமரசம் செய்து கலைந்து செல்ல வலியுறுத்தினர்.

#TamilSchoolmychoice

அதன் படக்காட்சிகளை கீழே காணலாம்:

இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்

(ராஜபக்‌சேவுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் உருவ பொம்மையை எரிக்கின்றனர்)

இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்

(ஆர்ப்பாட்டக்காரர்கள் ராஜபக்‌சேவின் உருவ பொம்மையை செருப்பால் அடிக்கின்றனர்)

இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்

(ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறையினர் சமாதானம் செய்ய முயற்சி செய்கின்றனர்)

இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்

(பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றனர்)