Home கலை உலகம் இரண்டாவது குழந்தைக்குத் தயாராகும் ‘தல’ அஜித்-ஷாலினி

இரண்டாவது குழந்தைக்குத் தயாராகும் ‘தல’ அஜித்-ஷாலினி

736
0
SHARE
Ad

Ajith-still-from-Veeram-Movie-300x194சென்னை, ஆகஸ்ட் 3 – வரிசையாக வெற்றிப் படங்களைக் கொடுத்து, மகிழ்ச்சியின் உச்சத்தின் இருக்கும் ‘தலை’ அஜித்துக்கு இன்னொரு செய்தியும் தற்போது உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மனைவி ஷாலினி இரண்டாவது குழந்தைக்குத் தாயாகப் போகின்றாராம்.

ஏற்கனவே, அவர்களுக்கு அனோஷ்கா என்ற பெண் குழந்தை இருக்கின்றார். இப்போது அடுத்து பிறக்கப் போவது அனோஷ்காவுக்கு தம்பியா, தங்கையா என்ற பரபரப்பிலும் ஆர்வத்திலும் அஜித் குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.

பூப்பந்து விளையாட்டில் தீவிரமாக ஈடுபடும் ஷாலின் தற்போது கர்ப்பம் காரணம் அந்த விளையாட்டுப் பயிற்சியையும் நிறுத்தி விட்டாராம்.

#TamilSchoolmychoice

அஜித் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் தயாரிப்பில் இருக்கும் படம்  அடுத்து வெளிவரத் தயாராகிக் கொண்டிருக்கின்றது. தலை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் படத்திற்கு காத்திருக்க, அஜித்-ஷாலினி தம்பதியரோ, தங்களின் அடுத்த வாரிசுக்கு ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.