Home தொழில் நுட்பம் காப்புரிமை ஒப்பந்தங்களை மீறியதாக சாம்சுங் மீது மைக்ரோசாஃப்ட் வழக்கு!

காப்புரிமை ஒப்பந்தங்களை மீறியதாக சாம்சுங் மீது மைக்ரோசாஃப்ட் வழக்கு!

489
0
SHARE
Ad

Samsungநியூயார்க், ஆகஸ்ட் 7 – மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சாம்சுங்கிற்கு எதிராக நியூயார்க் நீதிமன்றத்தில் காப்புரிமை தொடர்பான வழக்கு ஒன்றை தொடுத்துள்ளது. அதன்படி, 2011-ம் ஆண்டு இரு நிறுவனங்களுக்கு இடையே காப்புரிமையை பகிர்தல் தொடர்பான ஒப்பந்தத்தை சாம்சுங் மீறிவிட்டதாக மைக்ரோசாஃப்ட் தற்போது குற்றம்சாட்டி உள்ளது.

உலகின் முன்னணி மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாஃப்ட், திறன்பேசிகளில் சில அண்டிரோய்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் தொடர்பாக காப்புரிமங்களை பெற்றுள்ளது. இரு நிறுவனங்களுக்கு இடையே 2011-ம் ஆண்டு ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் படி, சாம்சுங் அத்தகைய தொழில்நுட்பங்களை தங்கள் தயாரிப்புகளில் பயன்படுத்தி வந்தது. இந்த ஒப்பந்தத்தில் முக்கிய அம்சமாக, இலாப சதவீதங்களில் சில பங்குகளை மைக்ரோசாஃப்ட்டிற்கு தர சாம்சுங் சம்மதம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் மைக்ரோசாஃப்ட், கடந்த ஆண்டு செல்பேசிகளின் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை வாங்குவதாக அறிவித்ததால், சாம்சுங் நிறுவனம் மைக்ரோசாஃப்ட்டிற்கு செலுத்தி வந்த இலாப சதவீதங்களை நிறுத்திக் கொண்டது. அதன் காரணமாக மைக்ரோசாஃப்ட், சாம்சுங் ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக வழக்கு பதிவு செய்துள்ளது.

#TamilSchoolmychoice

மைக்ரோசாஃப்ட் நிறுவனம், சாம்சுங்கிற்கு எதிராக பதிவு செய்யும் முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது. இரு நிறுவனங்களுக்கு இடையே தொழில்முறை பகிர்தலும், புரிதலும் நீண்ட காலமாகவே இருந்து வந்தது. எனினும், நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் வாங்கியதால், திறன்பேசிகளின் வர்த்தகத்தில் கடும் போட்டிகளை சந்திக்க நேரிடும் என்பதற்காக சாம்சுங், இரு நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தங்களை மீறி செயல்படுவதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் கருதுகின்றனர்.