Home வணிகம்/தொழில் நுட்பம் வட இந்தியாவில் சேவையை விரிவுபடுத்தியது ஏர் ஆசியா இந்தியா

வட இந்தியாவில் சேவையை விரிவுபடுத்தியது ஏர் ஆசியா இந்தியா

649
0
SHARE
Ad

air-asia-airplane-Mபுதுடெல்லி, செப். 7 – இந்தியாவில் கால் பதித்து வெற்றிகரமாக சேவைகளை அறிமுகப்படுத்தி வரும் ஏர் ஆசியா இந்தியா நிறுவனம் தனது சேவையை வட இந்தியாவிற்கும் விரிவுபடுத்தி உள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்) மற்றும் சண்டிகர் (பஞ்சாப்) ஆகிய நகரங்களுக்கு ஏர் ஆசியா விமானம் தனது பயணத்தை மேற்கொண்டது.

பெங்களூருவில் இருந்து இரு வழித்தடங்களிலும் பயணித்த விமானங்களில் அதன் மொத்த இருக்கைகளும் 180 பயணிகளால் நிரம்பி இருந்ததாக அவ்விமான நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“எங்களது வழித்தட பட்டியலில் ஜெய்ப்பூர் மற்றும் சண்டிகர் இணைந்திருப்பது உற்சாகமளிக்கிறது. இதன் மூலம் பயணிகளை பெங்களூருவில் இருந்து இவ்விரு நகரங்களுக்கும் மிகச் சுலபமாக எங்கள் சேவையின் மூலம் இணைக்க முடியும்”என்று ஏர் ஆசியா இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மிட்டு சாண்டில்யா தெரிவித்தார்.

தற்போது ஏர் ஆசியா பெங்களூருவில் இருந்து சென்னை, கொச்சி, கோவா,சண்டிநகர், ஜெயப்பூர் ஆகிய வழிதடங்களில் இருவழித் தடமாக  விமானங்களை இயக்குகிறது.

கடந்த ஜூன் 12 முதல் தனது சேவையைத் தொடங்கியுள்ள இந்நிறுவனமானது, ஏர் ஆசியா, டாடா சன்ஸ், டெலஸ்ட்ரா டிரேட்பிளேஸ் ஆகியவற்றுக்கு இடையே 49:30:21பங்குகள் என்ற விகிதாச்சார அடிப்படையில் உருவானதாகும்.