Home வணிகம்/தொழில் நுட்பம் டோனி மீது 6-ஆம் தேதி காவல் துறை விசாரணை

டோனி மீது 6-ஆம் தேதி காவல் துறை விசாரணை

1083
0
SHARE
Ad

புதுடில்லி – எதிர்வரும் ஜூன் 6-ஆம் தேதி ஏர் ஆசியாவின் தலைமைச் செயல் அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் இந்தியாவின் மத்தியக் காவல் துறையால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து ஏர் ஆசியாவின் இந்திய வணிக விரிவாக்கத் திட்டங்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்விக் குறி எழுந்துள்ளது.

அதே நேரத்தில் டோனி பெர்னாண்டஸ் மீது இந்தியக் காவல் துறையின் புலன் விசாரணை மற்றும் வழக்குப் பதிவு ஆகியவை காரணமாக, மலேசியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் ஏர் ஆசியா பங்குகள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு படுவீழ்ச்சியடைந்தன.

#TamilSchoolmychoice

ஜூன் 6-ஆம் தேதி டோனி பெர்னாண்டஸ் விசாரணைக்காக புதுடில்லி செல்வாரா இல்லையா என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.