கோலாலம்பூர் – எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரிக்கப்படுவார்.
1எம்டிபி விவகாரம், 1எம்டிபியின் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் சென்டிரியான் பெர்ஹாட் ஆகியவை தொடர்பில் ரோஸ்மா ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரிக்கப்படுவார் எனத் தெரிகிறது.
இதன் தொடர்பில் நஜிப் ஏற்கனவே விசாரிக்கப்பட்டு அவரிடம் இருந்து வாக்குமூலங்களும் பெறப்பட்டுள்ளன.
இதுவரையில் இரண்டு முறை நஜிப் ஊழல் தடுப்பு ஆணையம் வந்துள்ள நிலையில், ரோஸ்மா அங்கு வரவிருப்பது இதுவே முதன் முறையாகும்.