Home தொழில் நுட்பம் கூகுளுக்கு சரியான போட்டி அமேசான் தான்- கூகுள் தலைவர் எரிக் ஸ்க்மித்!

கூகுளுக்கு சரியான போட்டி அமேசான் தான்- கூகுள் தலைவர் எரிக் ஸ்க்மித்!

509
0
SHARE
Ad

googleவாஷிங்டன், அக்டோபர் 15 – இணைய தேடலில் கூகுள் நிறுவனத்தின் மிகப் பெரிய போட்டி இணைய வர்த்தகத்திற்குப் பெயர் பெற்ற அமேசான் நிறுவனம் தான் என கூகுள் தலைவர் எரிக் ஸ்க்மித் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:- “மிகச் சிறப்பாக இயங்கி வரும் கூகுளின் இணையத் தேடலுக்கு ‘பிங்’ (Bing) அல்லது ‘யாஹூ’ (Yahoo) நிறுவனம் தான் கடும் போட்டி அளிக்கும் என்று பலர் நினைக்கக் கூடும். ஆனால் இணைய உலகில் போட்டி என்பது எப்பொழுதும் ஒரே போன்று இருக்காது. தற்சமயம் எங்கள் நிறுவனத்திற்கு கடும் போட்டி அளிப்பது உண்மையில் அமேசான் நிறுவனம் தான்.”

“அமேசான் நிறுவனம் இணைய வர்த்தகத்தை முழு நோக்கமாக கொண்டு இயங்கினாலும், பயனர்களின் தேடலின் போது தேடல் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றது. இது கூகுளின் நடைமுறையாகும்” என்று அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

சமீபத்தில் அமேசான் நிறுவனம் ‘டுவிட்ச்’ (Twitch) நிறுவனத்தை 970 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது. இணைய விளையாட்டுகளுக்கு பெயர் பெற்ற  டுவிட்ச் நிறுவனத்தை வாங்குவதில் கூகுள் மற்றும் அமேசானுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், அமேசான், டுவிட்ச் நிறுவனத்தை கைப்பற்றியது. கடந்த 20 வருடத்தில் இணைய உலகில் இது மிகப் பெரும் வர்த்தகமாக பார்க்கப்படுகின்றது.

இது பற்றி எரிக் ஸ்க்மித் கூறுகையில், “டுவிட்ச்-ஐ கைப்பற்றியதன் மூலம் அமேசான் அடுத்த நகர்த்தலுக்கு தயாராகி வருகின்றது. நாம் குறைத்து மதிப்பிடப்படும் ஒருவரிடம் இருந்து தான் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழும், அதற்கு அமேசானும் ஒரு உதாரணம்” என்று அவர் கூறியுள்ளார்.