Home வாழ் நலம் இதய நோய்கள் மற்றும் கொழுப்புச் சத்தை அதிகரிக்கும் நூடுல்ஸ்!

இதய நோய்கள் மற்றும் கொழுப்புச் சத்தை அதிகரிக்கும் நூடுல்ஸ்!

625
0
SHARE
Ad

noodlesrecipeடிசம்பர் 10 – நூடுல்ஸ் என்பது அனைத்து வயதினராலும் விரும்பப்படும் மலிவான மற்றும் விருப்பமான உணவாகும். சமையலறையில் நுழைவதற்கு கூட நேரம் கிடைக்காதவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

இன்றைய தலைமுறையினருக்கு எதற்கும் நேரம் கிடைக்காததால், ஆரோக்கியமற்ற சுத்தமில்லாத உணவுகளை உண்ண பழகிக் கொண்டார்கள்.  தற்போதைய சூழலில், உடனடி நூடுல்ஸை ‘புற்றுநோய் நூடுல்ஸ்’ எனவும் குறிக்கலாம். அதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம்.

இன்றைய வேகமான உலகத்தில், அளவுக்கு அதிகமான வேலையின் காரணமாக நூடுல்ஸ் போன்ற உணவுகளை உண்ணும் நிலைக்கு நம்மை தள்ளி விட்டுள்ளது. அதை உட்கொள்வதற்கு 2 கப் வெந்நீர் இருந்தால் போதும்.

#TamilSchoolmychoice

பெரும்பாலும் நூடுல்சை நம்பி வாழ்பவர்களுக்கு செரிமான அமைப்பில் பல பிரச்சனைகள் ஏற்படும். உதாரணத்திற்கு வயிற்று வலி, ஈரல் மற்றும் கணைய பிரச்சனைகள் ஏற்படலாம்.

noodles-photoவெகு விரைவிலேயே தயாரிக்கப்படும் இந்த உணவில் மட்டும் தான் உலகத்திலேயே ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என்றும் எண்ணத் தோன்றும். ஆனால் உண்மை இன்னும் பலருக்கு தெரிவதில்லை.

உடனடி நூடுல்ஸ்களில் வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் குறைவாக உள்ளது என மருத்துவர்கள் மற்றும் உடல் ஆரோக்கிய வல்லுனர்கள் கூறுகின்றனர். ஒரு முறை உண்ணும் நூடுல்ஸில், தேவையான புரதம் மற்றும் வைட்டமின்கள் கிடைக்காமல் குறைபாடு ஏற்படும்.

அதிக இரத்த கொதிப்பு பிரச்சனையால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு சோடியம் என்பது உயிர் கொல்லியாக விளங்குகிறது. நமக்கு பிடித்தமான நூடுல்ஸில் சோடியம் என்பது ஒரு கை அளவிற்கு இருக்கிறது என ஆய்வுகள் கூறுகிறது.

chinese-chicken-noocles-tbஇதனால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு இடர்பாடு அதிகம். நூடுல்சை தினமும் உட்கொண்டு வந்தால், சின்ன குழந்தைகள் பல வகை பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

இரத்த கொதிப்புக்கும், இதய நோய்களுக்கும் கூடுதல் அளவிலான சோடியமும் காரணமாகும். நூடுல்ஸில் அதிக அளவிலான கொழுப்பு உள்ளது என பலரும் கூறுகின்றனர்.

மேலும் நம் விருப்ப உணவான உடனடி நூடுல்ஸில் கார்போஹைட்ரேட்ஸ் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கொழுப்பின் அளவு அதிகரிக்கும். ஆனால் அதில் அளவுக்கு அதிகமான காய்கறி ஊட்டச்சத்துக்கள் என கூறப்படுவதெல்லாம் உண்மையல்ல.

அதில் காணப்படும் உலர்ந்த பட்டாணி மற்றும் சில கேரட்கள் எவ்விதத்திலும் நமக்கு நன்மையை அளிக்காது. புதிய ஆட்டா நூடுல்ஸ் அதன் ஊட்டச்சத்துக்களுக்காக சற்று முக்கியமான உணவாக மாறிவிட்டது.

Veg.-Noodles_87ஆனால் உண்மைக்கு புறம்பாக பல அடி ஆழத்தில் பொய் மறைந்திருக்கிறது. ஒரு பாக்கெட் நூடுல்சில் தோராயமாக 400 கலோரிகள் இருப்பதாக அறியப்படுகிறது.

அதனால் இதய நோய்கள் மற்றும் கொழுப்புப் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஆரோக்கியமற்ற உணவாகும். அதனை பற்றிய பல ஆபத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டாலும் கூட இன்னமும் பலர் அதனை பிரியப்பட்டு உட்கொண்டு வருகின்றனர்.