புதுடெல்லி, டிசம்பர் 10 – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா சென்றுள்ளார். டெல்லி பாலம் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது புடின் கூறியதாவது, “ இந்த பயணத்தின்போது அணு உலை, தொழில்நுட்பம் மற்றும் ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரமாக விவாதிக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் உறவை அதிகரிக்க விரும்புவதாக அவர் கூறினார். பாகிஸ்தானுடனான ராணுவ ஒத்துழைப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள புடின்,
தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை மற்றும் போதை ஒழிப்பு நடவடிக்கையில் உதவுவது குறித்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் தெரிவித்தார்.
இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்லும் புடின், முதல் நாளான இன்று இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் புடின் பங்கேற்கிறார்.