Home உலகம் எம்.எச்.17: புடினுடன் விவாதித்த பிரதமர் அன்வார்!

எம்.எச்.17: புடினுடன் விவாதித்த பிரதமர் அன்வார்!

56
0
SHARE
Ad

மாஸ்கோ: ரஷியாவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், ரஷிய அதிபர் விளாடிமிர் புடினுடன் நடத்திய சந்திப்பில் எம்.எச்.17 மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் குறித்து நேரடியாக விவாதித்துள்ளார்.

அனைத்துலக வான்வெளி போக்குவரத்துக் கழகம் நடத்திய விசாரணையின் முடிவில் 2014-இல் எம்.எச்.17 மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷியாவே காரணம் என அண்மையில் அறிவித்தது.

“கிரெம்ளினில் நடத்தப்பட்ட எங்களின் இருதரப்பு சந்திப்பின்போது நான் வான்வெளி போக்குவரத்துக் கழகத்தின் விசாரணை முடிவு குறித்து புடினுடன் நேரடியாக விவாதித்தேன். அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் மரணமடைந்த பயணிகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில் இந்த விவகாரத்தில் மலேசியாவுக்கு நீதியும் நியாயமும் கிடைக்க தொடர்ந்து போராடுவோம். ரஷிய அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து நேரடியாக புடினுடன் விவாதிக்க எனக்கொரு வாய்ப்பு கிடைத்தது. சுதந்திரமான, நியாயமான விசாரணையாக இருந்தால் அந்த விசாரணையின் முடிவுகளை தாங்கள் கருத்தில் கொள்வதாக புடின் உறுதியளித்துள்ளார்” என அன்வார் தனது முகநூல் பதிவில் வெளியிட்ட காணொலியில் தெரிவித்தார்.