Home Featured உலகம் எம்எச் 17-ஐ இப்படித் தான் வீழ்த்தினார்கள் – காணொளியுடன் விளக்கம்!

எம்எச் 17-ஐ இப்படித் தான் வீழ்த்தினார்கள் – காணொளியுடன் விளக்கம்!

562
0
SHARE
Ad

MH17ஆம்ஸ்டெர்டாம் – எம்எச்17 பேரிடர் தொடர்பாக நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தபடி, டச்சு பாதுகாப்பு வாரியத்தின் முழு அறிக்கை வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையின்படி, ரஷ்யாவில் தயாரான ‘பக்’ ஏவுகணை மூலம் விமானம் வீழ்த்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும், இந்த பேரிடருக்கு காரணமானவர்கள் யார்? என்பது ஏறக்குறைய 15 மாதங்களாகியும் உறுதிபடுத்த முடியாத நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. வழக்கம்போல் ரஷ்யாவும், மேற்கத்திய நாடுகளும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன.

இதற்கிடையே விமானம் வீழ்த்தப்பட்டது தொடர்பாக டச்சு பாதுகாப்பு வாரியத்தின் தலைவர் கூறுகையில், “ஏவுகணை, விமானத்தின் காக்பிட் பகுதியின் இடதுபுற முகப்பில் வெடித்துள்ளது. அதனால் தான் எம்எச் 17 வீழ்த்தப்பட்டுள்ளது.”

#TamilSchoolmychoice

“அடுத்த 90 வினாடிகளில் விமானம் வானத்திலேயே 2 துண்டாக உடைந்து சிதறியுள்ளது. எனினும், குறிப்பிட்ட அந்த வினாடிகளில் பயணிகள் உயிருடன் இருந்தனரா? என்பதை உறுதிபடுத்த முடியவில்லை. அவர்கள் அந்த தருணத்தில் செல்பேசியை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

விமானம் வீழ்த்தப்பட்டது தொடர்பாக வெளியிடப்பட்ட மாதிரி காணொளியின் மூலம், விமானம் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்புறமிருந்து ஏவுகணை மூலம் தாக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

அந்த காணொளியைக் கீழே காண்க: