Home நாடு எம்எச்17: மலேசிய அரசாங்கத்தின் அறிக்கை கூட்டு விசாரணைக் குழு அறிக்கையுடன் வேறுபட்டுள்ளது!

எம்எச்17: மலேசிய அரசாங்கத்தின் அறிக்கை கூட்டு விசாரணைக் குழு அறிக்கையுடன் வேறுபட்டுள்ளது!

909
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி நடந்த எம்எச்17 விமான விபத்து தொடர்பான கூட்டு விசாரணைக் குழுவின் (ஜெஐடி)  முடிவுடன் மலேசிய அரசாங்க அதிகாரிகளின் அறிக்கைகள் வேறுபட்டிருப்பதால் அவ்விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் குழப்பமடைந்திருப்பதாக அவர்களை பிரதி நிதிக்கும் வழக்கறிஞர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

அவ்விபத்தில் பலியான 31 பேருடைய குடும்ப உறுப்பினர்கள் மலேசிய விசாரணைக் குழு இந்த வழக்கில் எந்தவொரு அரசாங்க நடவடிக்கை திட்டங்களையும் தங்களிடம் விளக்கமளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

கடந்த ஜூன் 19-ஆம் தேதி அனைத்துலக புலனாய்வாளர்கள்  எம்எச் 17 சுட்டு வீழ்த்தப்பட்டதில் 298 பேர் கொல்லப்பட்டதாக கூறி நான்கு பேர் மீது கொலைக் குற்றச்சாட்டை சுமத்தினர்.

#TamilSchoolmychoice

அவர்கள் ரஷ்ய நாட்டவர்களான இகோர் கிர்கின்செர்ஜி டுபின்ஸ்கி மற்றும் ஓலேக் புலாடோவ்ஒருவர் உக்ரேனிய நாட்டைச் சேர்ந்த லியோனிட் கார்சென்கோ ஆவார். அந்த அறிவிப்புக்கு பிறகு மலேசிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளின் கருத்துகள் ஜெஐடியின் கருத்துகளுடன் முரண்பாடாக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதுபோன்ற அறிக்கைகள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, மேலும் குடும்ப உறுப்பினர்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்படுகிறார்கள்என்று வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், எம்எச்17 பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் குழப்பத்திற்கு காரணமான உண்மைகளை குறிப்பாக குறிப்பிடவில்லை.