Home உலகம் எம்எச்17: அனைத்துலக புலனாய்வாளர்களின் கூற்று அடிப்படையற்றவை!- ரஷ்யா

எம்எச்17: அனைத்துலக புலனாய்வாளர்களின் கூற்று அடிப்படையற்றவை!- ரஷ்யா

800
0
SHARE
Ad

மாஸ்கோ: மலேசியா ஏர்லைன்ஸ் எம்எச் 17 விமான விபத்து குறித்து விசாரிக்கும் அனைத்துலக குழுவினரின் தலையீடு தொடர்பாக, ரஷ்யா முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகி உள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சு வருத்தம் தெரிவித்துள்ளது.

ஆதாரமற்ற இக்குற்றச்சாட்டுகள் அனைத்துலக சமூகத்தின் பார்வையில் ரஷ்யாவை தவறாக சித்தரிக்கும் நோக்கம் கொண்டவை என்று அது குறிப்பிட்டுள்ளது.

கூட்டு விசாரணைக் குழு (ஜேஐடி) தங்களது ஆதாரங்களுக்கான முழுமையான, மேலும் அவற்றை ஆதரிக்கும் உறுதியான ஆதாரத்தை கூட வழங்கவில்லை என்று அது கூறியது.

#TamilSchoolmychoice

ஜேஐடி முற்றிலும் அநியாயமான வாதங்களை முன்வைக்கிறது. அவற்றில் சில சந்தேகத்திற்குரிய தகவல் ஆதாரங்களாகக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையில், ரஷ்யாவின் விசாரணையில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் தொடர்ந்து வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகின்றன. ஜேஐடி ரஷ்ய பிரதிநிதிகள் முழு ஒத்துழைப்பை நிறுத்தி வைத்திருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்என்று ஓர் அறிக்கையின் வாயிலாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

இவ்விபத்திற்கான உண்மையன காரணத்தை கண்டுபிடிப்பதில் ரஷ்யா மிகுந்த அக்கறை கொண்டிருந்தது என்றும், முதல் நாளிலிருந்தே ஒவ்வொரு அம்சத்திலும் விசாரணைகளுக்கு உதவ தயாராக இருந்துள்ளது என்றும் அது கூறியது.

நேற்று புதன்கிழமை (ஜூன் 19), அனைத்துலக புலனாய்வாளர்கள்  எம்எச் 17 சுட்டு வீழ்த்தப்பட்டதில் 298 பேர் கொல்லப்பட்டதாக கூறி நான்கு பேர் மீது கொலைக் குற்றச்சாட்டை சுமத்தினர். அவர்கள் ரஷ்ய நாட்டவர்களான இகோர் கிர்கின், செர்ஜி டுபின்ஸ்கி மற்றும் ஓலேக் புலாடோவ். ஒருவர் உக்ரேனிய நாட்டைச் சேர்ந்த லியோனிட் கார்சென்கோ ஆவார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி,  கோலாலம்பூருக்கு ஆம்ஸ்டர்டாமில் இருந்து புறப்பட்ட பின்னர் எம்எச் 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.